திருவேற்காடு, புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் நிறைமணி காட்சி அமைக்கப்பட்டது. நிறைமணி காட்சி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று சிறப்பு நிகழ்வான நிறைமணி காட்சி நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் நிறைமணி காட்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் கருவறை மற்றும் முன்மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மளிகைப் பொருட்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கட்டித் தொங்கவிடப்பட்டு அழகிய தோரணம் அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு வண்ணங்களில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் பந்தல் முழுவதும் தொங்கவிடப்பட்டிருந்த காட்சி, பார்ப்பதற்கு அழகாகவும், பசுமையாகவும், கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வகையிலும் அமைந்திருந்தது. இதனால் நிறைமணி காட்சி, தொங்கும் தோட்டம் போல் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதையொட்டி, மூலவர் தேவி கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. நிறைமணி காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பந்தல் முழுவதும் தொங்கவிடப்பட்டிருந்த வண்ணமயமான காய்கறிகள் மற்றும் பழங்களை பக்தர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், உலகில் போதிய மழை பெய்து வளம் பெருகவும், அனைத்து ஜீவராசிகளும் பசி, பட்டினி மற்றும் பஞ்சமின்றி வாழவும், இயற்கை வளங்கள் பெருகவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி இந்த நிறைமணி காட்சி ஆண்டுதோறும் அமைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது. 3 நாட்கள் நடக்கிறது இந்த ஆண்டு நடைபெற்ற நிறைமணி காட்சியில் சுமார் 5 டன் அளவிலான காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 3 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளில், பந்தலில் தொங்கவிடப்பட்டுள்ள காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து கூட்டாஞ்சோறு தயாரிக்கப்பட்டு அம்மனுக்கு படைக்கப்படும். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/niraimani-display-at-thiruverkadu-karumariamman-temple




