சென்னை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் காற்றின் தரம் குறித்து ‘சுவச் வாயு சர்வேஷன் 2026’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது.1 லட்சத்திற்கும் மேல் மக்கள் வாழும் நகரங்கள் பிரிவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், திருச்சி மாநகராட்சி தேசிய அளவில் 12-வது இடத்தை சென்றுள்ளது! கடந்த ஆண்டு 9-வது இடத்தில் இருந்த திருச்சி, இந்த முறை சற்று பின்வாங்கினாலும், தமிழக அளவில் தனது ‘நம்பர் 1’ தக்க வைத்து கொண்டுள்ளது. லக்னோ முதலிடம் காற்று மாசுபாட்டை குறைக்க நகரங்கள் எடுத்த நடவடிக்கைகள், வாகன புகை கட்டுப்பாடு, குப்பை எரிப்பை தடுத்தல், சாலை தூய்மை போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 200 மதிப்பெண்களுக்கு, திருச்சி மாநகராட்சி 183 மதிப்பெண்களை அள்ளியுள்ளது. இந்த தேசிய பட்டியலில் லக்னோ, இந்தூர், ஜபல்பூர் ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. சென்னை தமிழகத்தின் தலைநகரமான சென்னை 35-வது இடத்திற்கும், தூங்கா நகரமான மதுரை 39-வது இடத்திற்கும் தள்ளப்பட்டு பலத்த சறுக்கலை சந்தித்துள்ளன. அதிகாரி பேட்டிஇது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கூறுகையில், வாகன புகை "திவாகன புகைருச்சியில் காற்றில் கலக்கும் பி.எம். 10 நுண்துகள்களின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் 88 ஆக இருந்த இந்த அளவு, 2025-26 ஆண்டில் 53 ஆக குறைந்து சுத்தமான காற்று வீசுகிறது. மரக்கன்றுகள் நட்டதும், சாலைகளை தூய்மையாக வைத்திருந்ததுமே இதற்கு முக்கியக் காரணம். அதேசமயம், வாகன புகை மற்றும் குப்பை எரிப்பு போன்றவை காற்றின் தரத்தை பாதிக்கின்றன என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/air-quality-trichy-tops-tamil-nadu




