நாமக்கல், நாமக்கல்லின் முக்கியமான அடையாளம் கொல்லிமலை. 70 கொண்டை ஊசி வளைவுகளின் பயணத்தை அனுபவிக்க, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு குவிகின்றனர். சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணிகள் வரும்போது சோளக்காடு அருகே உள்ள நம் அருவி, எட்டுக்கை அம்மன், வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கின்றனர். அத்துடன் மாசிலா அருவி மற்றும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள். வறண்ட நீர்வீழ்ச்சி இந்தநிலையில் விடுமுறையையொட்டி கொல்லிமலைக்கு ஏராள மான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள புகழ்பெற்ற அறப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், பல்வேறு நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றை குடும்பத்துடன் பார்த்து ரசித்தனர். இதன் தொடர்ச்சியாக, கொல்லிமலையின் மிக முக்கிய பகுதியான ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு அவர்கள் சென்றனர். போதிய மழைப்பொழிவு இல்லாததால் நீர்வீழ்ச்சி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. மிகவும் குறைந்தளவு தண்ணீர் மட்டுமே கொட்டி வருகிறது. இதனால் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/akaya-gangai-falls-in-kolli-hills-dries-up-tourists-disappointed




