கொடைக்கானல், கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காட்டெருமைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், அங்குள்ள நீரோடைகள் மற்றும் குட்டைகள் முற்றிலும் வறண்டுவிட்டன. இதனால் குடிநீர் மற்றும் உணவு தேடி காட்டெருமை, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து வருகின்றன. தொட்டிக்குள் விழுந்தது இந்தநிலையில் நேற்று முன்தினம் காட்டெருமை ஒன்று தண்ணீர் தேடி பெரும்பாறை அருகே வெள்ளரிக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் காபி தோட்டத்துக்குள் புகுந்தது. அப்போது அங்கிருந்த கழிவுநீர் தொட்டியின் (செப்டிக் டேங்க்) சிமெண்டு மூடியின் மீது அந்த காட்டெருமை ஏறி நின்றது. பாரந்தாங்காமல் சிமெண்டு மூடி திடீரென உடைந்து நொறுங்கியது. உயிரிழந்தது இதில் காட்டெருமை எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தது. தொட்டிக்குள் காட்டெருமை விழுந்து உயிருக்கு போராடியது. இதனை பார்த்த விவசாயிகள், வத்தலக்குண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், காட்டெருமையை பார்வையிட்டனர். அப்போது காட்டெருமை உயிரிழந்தது தெரியவந்தது. பொதுமக்கள் கோரிக்கை வறட்சி காலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனப்பகுதிக்குள் செயற்கை தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/kodaikanal-water-search-wild-buffalo-falls-into-sewage-tank-dies




