Fuld artikel
விஜய் டிவியில் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கவிருக்கிறது புத்தம் புதிய ரியாலிட்டி ஷோவான 'செகன்ட் லவ்' என்கிற பேச்சு தான் இப்போது டெலிவிஷன் உலகில் வைரல். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை முதன்முதலாக தமிழுக்குக் கொண்டு வந்த என்டமால் ஷைன் நிறுவனத்தின் துணை நிறுவனமான பானிஜெய் என்டர்டெய்ன்மென்ட்' நிறுவனமே இந்த நிகழ்ச்சியையும் தமிழில் அறிமுகப் படுத்துகிறது. தென்னிந்தியாவிலும் இதுவே முதல்முறையாம். அது என்ன 'செகன்ட் லவ்' ? காதலில் தோல்வியடைந்தவர்கள், திருமண பந்தத்தில் பிரச்னை உண்டாகி தனித்தனியே பிரிந்து வாழ்கிறவர்கள் முதலானோர் அந்த சூழலில் இருந்து வெளிவந்து அடுத்த காதல் அல்லது ரிலேஷன்ஷிப்பை நோக்கி நகர்வதுதான் கான்செப்ட் என்கிறார்கள். அப்படி நகர்வதற்கான களமாக இந்நிகழ்ச்சி இருக்குமென்கிறார்கள். இன்னும் எளிமையாகச் சொல்லவேண்டுமெனில், நிகழ்ச்சிக்குள் செல்கிற லவ் ஃபெயிலியர் நபர்கள், நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் போது தங்களது அடுத்த பார்ட்னரைக் கண்டுபிடித்து விடலாமாம். தமிழில் பிரமாண்டமாக வெளிவர இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரப் பணிகள் தொடங்கி விட்டன. இந்த மாத இறுதியில் புரொமோ வெளியாகலமென எதிர்பார்க்கப் படுகிறது. கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் ஹோர்டிங்குள் நகரின் முக்கியப் பகுதிகள் இடம் பெறுமென்கிறார்கள் Ramya Krishnan சரி இந்த நிகழ்ச்சிகளின் போட்டியாளர்கள் மற்றும் தொகுப்பாளர்? அந்த தகவலையும் திரட்டினோம். நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி வருவது போல் வார இறுதி எபிசோடில் மட்டும் இவர் வருவார். அதேநேரம் தினமும் போட்டியாளர்களுடன் கலந்து பேசும் இன்னொரு ஹோஸ்டும் உண்டு. அவர் இந்தி பிக்பாஸ் வரை சென்று வந்த நம்மூஉர் ஸ்ருதிகா அர்ஜுன் என்கிறார்கள். போட்டியாளர்களாக சினிமா, சின்னத்திரை, மாடலிங் ஏரியாவிலிருந்து போட்டியாளர்கள் இடம் பெற இருக்கின்றனர். ஆறு ஆண்கள் ஆறு பெண்கள் என மொத்தம் 12 பேர் வரவிருக்கிறார்கள். டாஸ்குகள் உண்டு. ஆனால் சண்டை வம்பு தும்பு என அதிகம் இருக்காமல் ரொமாண்டிக்காக இருக்குமென்கிறார்கள். aseem தொடர்ந்து 35 நாட்கள் ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சியின் மொத்த ஷூட்டிங்கும் மும்பையில் நடந்து முடிந்து விட்டதாகச் சொல்கிறார்கள். சேனலில் தினமும் இரவு ஒரு மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவிருக்கும் அதேவேளை ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் பகலில் ஒளிபரப்பாகவிருக்கிறது. பிக்பாஸ் தமிழ் சீசன் 6 ன் டைட்டில் வின்னர் அசீம், சிந்தூரி, வீனா என்கிற இரு மாடல்கள், கேரளாவைச் சேர்ந்த ஒரு நடிகை, அமெரிக்க வாழ் தமிழர் ஒருவர் என கலந்து கொள்ளும் சில போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் நமக்கு பிரத்யேகமாகக் கிடைத்தன. sruthika arjun கவின், ரியோ வரிசையில் விஜய் டிவி தயாரிப்பு என்கிற கேட்டகிரியில் நிகழ்ச்சிக்குள் செல்லும் அசீமைத் தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவருமே தமிழுக்குப் புது முகங்கள் தானாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற பிறகு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய அசீம் நடித்த படங்கள் விரைவில் வெளியாக இருக்கிற சூழலில் இந்த நிகழ்ச்சிக்குள் செல்கிறார் அவர் என்கிறது டிவி வட்டாரம்.! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor


