சென்னை, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களின் சீர்மிகு நல்லாட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி இதுவரை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 9,205 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அறங்காவலர்கள் நியமனம் இதில் சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் உள்ள 214 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்காக கடந்த 14.06.2026 அன்று தமிழ் மற்றும் ஆங்கில முன்னணி நாளிதழ்களிலும், இத்துறையின் வலைதளத்திலும் விளம்பரம் செய்யப்பட்டது. விண்ணப்பங்களை 22.07.2026 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று இறுதிநாள் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், பக்தர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அதிகப்படியான தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 12.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12ம் தேதி எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுடைய விருப்பமுள்ள பக்தர்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 12.08.2026 அன்று மாலை 5.45 மணிவரை இணையத்தளம் வாயிலாக பதிவேற்றம் செய்து / நேரில் / அஞ்சல் மூலமாக அந்தந்த திருக்கோவில் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-extended-for-applying-for-the-appointment-of-non-hereditary-trustees-for-temples




