புது டெல்லி, மிலாது நபி பண்டிகையையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தெரிவித்ததாவது:- வாழ்த்து “மீலாது நபி என்னும் இந்த புனிதமிக்க நாளில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பாக, இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நினைவு கூறும் தருணம் மீலாது நபி பண்டிகையானது, நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவு கூறும் தருணம் ஆகும். அறநெறி, கடமை உணர்வு ஆகிய பாதையை பின்பற்றுவதற்கு அவரது போதனைகள் நமக்கு உத்வேகம் அளிக்கிறது. உத்வேகம் அனைவரையும் உள்ளடக்கிய, வளர்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு, விரைந்து பங்களிக்க நபிகள் நாயகத்தின் உன்னதமிக்க கொள்கைகள் நமக்கு உத்வேகம் அளிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/president-droupadi-murmu-milad-un-nabi-greetings



