இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பன்னு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உளவுத்துறை யின் துல்லியமான வழிகாட்டுதலின்படி, பாகிஸ்தான் ராணுவத்தினர் அங்கு அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பிற்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த 24 ஆபத்தான பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த நவீன ரக போர்க்கால ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் குவியலாக கைப்பற்றப்பட்டன. வெற்றி கரமாக ஆபரேஷனை முடித்த ராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் உள்துறை மந்திரி மோசின் நக்வி ஆகியோர் பாராட்டியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/24-terrorists-shot-dead-in-pakistan




