நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காரையாறு காணிக்குடியிருப்பு பழங்குடியின பகுதியில் இயங்கி வரும் அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்வதற்காகவும், காணிப்பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடல் செய்வதற்காகவும் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு நேற்றுமுன் தினம் மாலை பாபநாசம் முண்டத்துறை வனச்சரகத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் வந்து தங்கினார். சிகிச்சை அளிக்கப்பட்ட ஓட்டுநர் மணிகண்டன் அவருடன் வந்த பழங்குடியின நலத்துறை இயக்குநர், அத்துறையின் உயரதிகாரிகள், உதவியாளர்கள், கார் டிரைவர்கள் உட்பட அன்னைவரும் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், நேற்று காலை பழங்குடியின நலத்துறையின் இயக்குநரின் கார் டிரைவரான திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் முகாம் அலுவலக குடியிருப்பு அருகேயுள்ள இயற்கை அழகு நிறைந்த மலைப்பகுதியில் மரங்களின் இடையில் நின்று கொண்டு செல்பி எடுத்துக் கொண்டார். அப்போது மரத்தில் இருந்த மலைப்பாம்பு ஒன்று திடீரென பாய்ந்து அவரைக் கடித்தது. இதை சற்றும் எதிர் பாரத அவர் வலியால் அலறித் துடித்தார். அவருடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு பாம்பு கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிறகே மலைப்பாம்பு கடித்த விவகாரம் கசியத் தொடங்கியது. ”பொதுவாகவே வெளியூரில் இருந்து எங்கள் காணிக்குடியிருப்பு பகுதிக்கு வருபவர்கள் இங்குள்ள மூலிகைகள், மூலிகை மரங்கள், அரிய வகை உயிரினங்கள், தெளிந்த நீரோடைகள், சிற்றருவிகள் போன்றவற்றை பார்த்தவுடன் தானாகவே அவர்களுக்கு புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். காணிக்குடியிருப்பு செல்லும் வழி அந்த எண்ணத்தில் இதுபோன்ற பாம்புகளின் தாக்குதல்களை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. மலைப்பாம்புகள் மட்டுமல்ல பல்வேறு வகை விஷப்பாம்புகள், விஷப்பூச்சிகளும் இங்கு ஏராளம் உண்டு. அந்த ஓட்டுநர் புகைப்படம் எடுக்க வேண்டும் என எங்களிடம் கூறியிருந்தால், எங்களில் யாரையாவது உடன் அனுப்பி வைத்திருப்போம். பாம்புக்கடியில் இருந்து தப்பித்திருக்கலாம்” என்றனர் காணிமக்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/environment/a-car-driver-accompanying-minister-vanniyarasu-on-a-field-visit-to-a-forest-area-was-bitten-by-a-python-while-taking-a-selfie




