வேலூர், வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதால், அப்பகுதி மக்களின் பாரம்பரிய நம்பிக்கையின்படி, மழை வேண்டி ஆண் மற்றும் பெண் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதற்காக இரு கழுதைகளுக்கும் மணமகன், மணமகள் அலங்காரம் செய்யப்பட்டு, மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, யாகம் வளர்த்து, மந்திரங்கள் முழங்க பொதுமக்கள் முன்னிலையில் கழுதைகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் என்ற நம்பிக்கை உள்ளதால் ஏராளமான இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/donkey-wedding-to-invoke-rain-a-unique-event-in-vellore




