சென்னை, ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற அபய் சிங்கிற்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- வெள்ளி பதக்கம் ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய நாட்டிற்காக வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் அபய் சிங்கிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் Elite Scheme திட்டத்தில் பயிற்சி பெற்றுவரும் அபய் சிங், பல்வேறு உலகளவிலான போட்டிகளில் திறம்பட விளையாடி உலக அரங்கில் தமிழகத்திற்குப் புகழ் சேர்த்துள்ளார். வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வெல்பவர்களுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத் தொகையினை பெறும் அபய் சிங், இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் மேலும் பெருமைகள் சேர்க்கும் விதமாக வெற்றிப் பயணத்தைத் தொடர எனது பாராட்டுகள். இவரது சாதனைகள், அபாரமான உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தால் வெற்றிக்கொடி நாட்டலாம் என்று தமிழக இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/abhay-singh-wins-silver-in-asian-games-minister-adhav-arjuna-congratulates-him




