தூத்துக்குடி, தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மின்தடை காரணமாக இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகர பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வல்லநாடு மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (9.7.2026, வியாழக்கிழமை) மாநகரில் குடிநீர் வினியோகம் இருக்காது என தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகரின் முக்கிய குடிநீர் வினியோகப் பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் இன்று (9.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தூத்துக்குடியில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம் இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் முழுமையாக நிறுத்தப்படும். எனவே, மாநகர பகுதி பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரை முன்னதாகவே சேமித்து, அதனைச் சிக்கனமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-supply-to-be-suspended-in-thoothukudi-today-corporation-commissioner-announces




