யுவராஜ் கணேசன் தயாரித்து பாரி இளவழகன் இயக்கி நடித்த 'அன்பே டயானா' படம் சமீபத்தில் வெளியாகி 'ஹிட்' அடித்தது. ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் உள்பட பலரும் நடித்துள்ளனர். 'அன்பே டயானா' படத்தின் வெற்றி குறித்து கதாநாயகி ரம்யா ரங்கநாதன் பேசும்போது, 'அன்பே டயானா' படத்துக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல டீம் கிடைத்தால் மகிழ்ச்சியும், வெற்றியும் தானாக கிடைக்கும். அப்படித்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. ரசிகர்களின் கைத்தட்டல்தான் எங்களுக்கு மிகப்பெரிய விருது. நமது பெயரை அழைப்பதற்கு பதில், கதாபாத்திரத்தின் பெயரை சொல்லி அழைப்பதை நாம் பெரிதும் விரும்புகிறோம். அந்த வகையில் என்னை எல்லோரும் 'மேஜிக்' (கதாபாத்திரத்தின் பெயர்) என்று கூப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தது. எனது வாழ்க்கையில் நடந்த மேஜிக் இது. படத்தை பார்த்து நிஜத்திலேயே ஆங்கிலோ இந்தியன் என்றே என்னை அழைக்க தொடங்கி விட்டார்கள். அந்தவகையில் எனக்கு ஒரு நல்ல அடையாளம் கிடைத்ததாகவே உணருகிறேன்" என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/fans-applause-is-the-greatest-award-ramya-ranganathan




