சென்னை, காவல்துறைக்கு தேவையான அதிகாரத்தை வழங்கி, அவர்கள் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதித்திட வேண்டும்” என்று தமிழக அரசை டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அதிர்ச்சி சென்னை கே கே நகர் கன்னிகாபுரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றி திரிந்த ரவுடியை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. குற்ற சம்பவங்கள் சேலம் தலைவாசல் அருகே வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த திமுக நிர்வாகி கொலை, சென்னை வால்டாக்ஸ் சாலையில் இளைஞர் குத்தி கொலை, விருதுநகர் அருகே சிறுமி மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி, தருமபுரி பேருந்து நிலையத்தில் பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி என தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் குற்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. சட்டம் ஒழுங்கு பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டிய அரசு நிர்வாகம், ரீல்ஸ் கண்டெண்டை தேற்றுவதிலும், பொய் செய்திகளை வித விதமாக எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதிலுமே தன் முழு கவனத்தையும் செலுத்தி வருவதால், சமூக விரோதிகள் எந்தவித அச்சமுமின்றி சுதந்திரமாக சுற்றித்திரியும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து கொண்டிருக்கிறது. முழு சுதந்திரம் எனவே, காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய ரவுடி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, குற்ற செயல்களை தடுப்பதற்கும், ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறைக்கு தேவையான அதிகாரத்தை வழங்கி அவர்கள் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதித்திட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-police-must-be-granted-full-independence-ttv-dhinakaran-urges




