சென்னை, சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள 19-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்தார். அடுக்குமாடி குடியிருப்பு சென்னை அருகே ஆவடி, காந்திநகர், வள்ளலார் தெருவைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 23), அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து, அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றார். 19-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை அங்குள்ள 19-வது மாடிக்குச் சென்ற சந்தோஷ், திடீரென அங்கிருந்து குதித்துவிட்டார். இதில் தலை மற்றும் 2 கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து, சந்தோஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-youth-commits-suicide-by-jumping-from-19th-floor




