புதுடெல்லி, இந்தியப் பழங்குடியின மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை முறைகள், சடங்குகள், மற்றும் இயற்கை வழிபாடுகளை அப்படியே உலகிற்கு பறைசாற்றும் உன்னதமான கலை வடிவமாக 'டோக்ரா' உலோகக் கலையை மாற்றி வாழ்ந்து வருகின்றனர். சிந்துவெளி நாகரிகக் காலம் தொட்டு இன்று வரை அழியாமல் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த உலோக வார்ப்பு கலை, பழங்குடி மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகத் திகழ்கிறது. 5,500 ஆண்டுகால வரலாற்றுத் தொன்மை தங்கள் வாழ்க்கையையே அழகிய உலோகக் கலையாக மாற்றி அமைத்தவர்கள் டோக்ரா பழங்குடியின மக்கள். மெழுகு அச்சு முறையில் பித்தளை மற்றும் வெண்கலப் பொருட்களை உருவாக்கும் இக்கலை, இந்தியாவின் பழமையான கைவினைப் பாரம்பரியங்களில் ஒன்றாகும். டோக்ரா கலை என்பது 'இழந்த மெழுகு வார்ப்பு' எனப்படும் மிகப்பழமையான தொழில்நுட்பமாகும். மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட புகழ்பெற்ற 'நடனமாடும் மங்கை' வெண்கலச் சிலை இந்த டோக்ரா தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இக்கலை சுமார் 5,500 ஆண்டுகள் பழமையானது என்பது நிரூபணமாகிறது. கலையில் பிரதிபலிக்கும் பழங்குடி வாழ்வியல் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வாழும் 'டோக்ரா தமதார்' பழங்குடியின மக்களால் இக்கலை பாரம்பரியமாக வளர்க்கப்பட்டு வருகிறது. தங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் காடுகள், மரங்கள், மற்றும் விலங்குகளை சிலைகளாக வடிக்கின்றனர். வேட்டையாடுதல், நடனம், திருவிழாக்கள், நெசவு செய்தல் மற்றும் விறகு சேகரித்தல் போன்ற தங்களின் அன்றாடப் பணிகளையே முதன்மைப் பொருளாகக் கொண்டு கலைப்பொருட்களை உருவாக்குகின்றனர். பழங்குடியினப் பெண்களின் பாரம்பரிய உடைகள், ஆபரணங்கள் மற்றும் அவர்களின் பாரம்பரியக் கதைகள் அனைத்தும் இந்த உலோகச் சிலைகளில் மிக நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடினமான உற்பத்தி முறை டோக்ரா கலையின் மிக முக்கியச் சிறப்பு, இதில் எந்தவொரு நவீன இயந்திரங்களோ அல்லது செயற்கை அச்சுகளோ பயன்படுத்தப்படுவதில்லை. முதலில் களிமண்ணால் ஒரு தற்காலிக வடிவம் செய்யப்படுகிறது. அதன் மேல் தேன்மெழுகு நூல்களால் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. மீண்டும் அதன் மேல் களிமண் பூசப்பட்டு உலர்த்தப்படுகிறது. பின்னர் அது சூடாக்கப்படும் போது மெழுகு உருகி வெளியேறுகிறது. அந்த இடைவெளியில் உருகிய பித்தளை அல்லது வெண்கல உலோகம் ஊற்றப்படுகிறது. இறுதியாக மண் அச்சு உடைக்கப்பட்டு சிலை வெளிக்கொண்டு வரப்படுகிறது. ஒவ்வொரு அச்சும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட முடியும் என்பதால், டோக்ரா முறையில் செய்யப்படும் ஒவ்வொரு சிலையும் உலகில் தனித்துவமான ஒன்றாகவே திகழ்கிறது. இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடியின மக்கள், தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும், கலாச்சாரத்தையும் இந்த உலோகக் கலையின் மூலம் அழியாத காவியமாக மாற்றி உலகிற்குத் தந்துள்ளனர். Dhokra art | தங்கள் வாழ்க்கையையே கலையில் காட்டிய பழங்குடியின மக்கள் — Thanthi TV (@ThanthiTV) August 20, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/tribal-people-who-portrayed-their-very-lives-through-art



