சென்னை, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி - மேகதாது பிரச்சினையை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது - மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12 அன்று தண்ணீர் திறக்காதது - காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது - கர்நாடக முதல்வரை சந்திக்கப் போவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது. இப்படி தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், கழகத்தின் சார்பில் தஞ்சை மாநகரில் வரும் ஆகஸ்ட்-3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். தஞ்சையில் கூடுவோம் - விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்!” இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-betraying-farmers-udhayanidhi-stalins-allegation




