இந்தியச் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிராதப் போராட்டத்தை தொடங்கி இன்றோடு 22 நாள்கள் ஆகின்றன. அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், நேற்று முன்தினம் (ஜூலை 18, 2026), டெல்லி அரசு மருத்துவமனை ஆன சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை சோனம் வாங்சுக்கும், அவரது மனைவி கீதாஞ்சலியும் 'சட்டவிரோதக் காவல்' என்று குறிப்பிடுகிறார்கள். நீட், க்யூட் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தான் சோனம் வாங்சுக் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார். சோனம் வாங்சுக்`இன்னும் 2 நாள்களில் இறந்துவிடலாம்' - சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டம்; செவிமடுக்காத அரசு! தான் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் சோனம் வாங்சுக். அவை. ``நான் எப்போது உண்ணாவிரதத்தை முடிப்பேன். எனது உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், 'சன்சத் சலோ' (நாடாளுமன்றம் நோக்கிச் செல்வோம்) மார்ச் பேரணி முடியும் வரை எனது உண்ணாவிரதம் தொடரும். பின்வரும் சூழ்நிலைகளில் மட்டுமே அது கைவிடப்படும்… அன்பான நண்பர்களே, ஆதரவாளர்களே, உங்களில் பலர் நான் எப்போது உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று கேட்டுள்ளீர்கள். ஏற்கனவே ஆதரவாளர்களிடம் குறிப்பிட்டது போல, வரும் ஜூலை 20 அன்று நான் எனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வேன். ஆனால், அதற்கு இந்த நிபந்தனைகள் நிறைவேற வேண்டும். > சமீபகாலமாக கல்வி முறையில் ஏற்பட்டுள்ள தோல்விகள்—வினாத்தாள் கசிவு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். சோனம் வாங்சுக்"எந்தவொரு உயிரும் விலைமதிப்பற்றது" - சோனம் வாங்சுக் உடல்நிலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு > நானும் சி.ஜே.பி அமைப்பின் தலைவர்களும் நாடாளுமன்றத்தின் வாசலைச் சென்றடையும் போது, அங்குள்ள மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இந்த விவகாரத்தை இப்போது நாடாளுமன்றத்தில் கையில் எடுப்போம் என்று எங்களிடம் உறுதியளிக்க வேண்டும். > ஒருவேளை எனது உடல்நிலை அல்லது இதர காரணங்கள் இதற்கு இடம் தராவிட்டால், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நான் இருக்கும் இந்த மருத்துவமனைக்கு நேரில் வந்து மேற்கண்ட உறுதிமொழியை வழங்க வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார். WHEN WILL I END THE FAST…. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/sonam-wangchuk-lists-conditions-to-end-22-day-hunger-strike




