சென்னை, காவிரி நீர் விவகாரத்தில் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். அமைச்சர் நிர்மல் குமார் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- காவிரி நீரில் மாநிலத்திற்குரிய பங்கைப் பெறுவதற்கு சுப்ரீம் கோர்ட்டை நாட உள்ளோம். சட்டரீதியாக சுப்ரீம் கோர்ட்டின் மூலம் நமக்கு தேவையான நீரை பெற வேண்டி உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை மீறி, கர்நாடகம் தொடர்ந்து நீரைத் திறந்துவிட மறுத்து வருகிறது. காவிரி நீரில் தமிழ்நாடு தனது பங்கைப் பெறுவதை தடுப்பதையே நோக்கமாகக் கொண்ட அரசியலையே கர்நாடகம் நீண்டகாலமாக செய்து வருகிறது.மாநில விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்ட வல்லுநர்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களுடன் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறார்; மாநிலத்தின் விரிவான சட்ட உத்தி மற்றும் இறுதி முடிவுகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடுதல், தீர்ப்பாயத்தை வலியுறுத்துதல், மாநிலங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்துதல் அல்லது மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளை அரசு தற்போது பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-issue-legal-action-will-be-taken-to-protect-the-interests-of-farmers-minister-nirmal-kumar




