திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிறுவர்கள் உயிரிழப்பு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லம்பட்டி பிரிவில் சாலையோரத்தில் தனுஸ்ரீ(5), யோக வர்ஷி(11). அனன்யா(6) மற்றும் மோசிகீரன்(6) ஆகியோர் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வேன் ஒன்று, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த சிறுவர்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இதில் 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சி இச்சம்பவம் குறித்து வடமதுரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இக்கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-4-children-killed-in-accident-involving-unidentified-vehicle




