கொழும்பு, இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான இளையோர் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (19 வயதுக் குட்பட்டோர்) கொழும்பில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 411 ரன்களும், இலங்கை 148 ரன்களும் எடுத்தன. 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 3 விக்கெட்டுக்கு 208 ரன்களுடன் டிக்ளேர் செய்து 472 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன் னிங்சை ஆடிய இலங்கை 3-வது நாள் முடிவில் 4 விக்கெட் டுக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி 260 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அத்துடன் ஒரு நாள் தொடரை இழந்ததற்கு இந்தியா பழிதீர்த்துக் கொண்டது. சுழற்பந்து வீச்சாளர் ரோகித் யாதவ் 4 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் சி.வெங்கட்டா 3 விக்கெட்டும் சாய்த்து வெற்றிக்கு வித்திட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/youth-test-india-defeats-sri-lanka-to-clinch-the-series




