சென்னை, சென்னை பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் சென்னை பறக்கும் ரெயில் சேவையை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசால் முதல்முறையாக கடந்த 2011 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட முன்மொழிவுக்கு, 15 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு அனுமதி கிடைத்துள்ளது. இதன்மூலம் எம்.ஆர்.டி.எஸ் ன் சொத்துக்கள், இயக்கம், பராமரிப்பு ஆகியவை சென்னை மெட்ரோவுக்கு கைமாறுகிறது. இதையடுத்து மெட்ரோ ரெயில் கட்டமைப்புகளுக்கு ஏற்றவாறு எம்ஆர்டிஎஸ் ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படும். எம்ஆர்டிஎஸ் ரெயில் நிலையத்தில் வணிக வளாகங்கள் அமைத்தல் சிக்னல் மேம்பாடு செய்தல், எம்ஆர்டிஎஸ் தண்டவாளங்களுக்கு ஏற்ப மெட்ரோ ரெயில் பெட்டிகளைத் தயாரித்தல், ரெயில் நிலையத்தில் மின்தூக்கி அமைத்தல், நகரும் மின்படிக்கட்டு உள்ளிட்டவையுடன் 2028-ம் ஆண்டு இறுதிக்குள் எம்ஆர்டிஎஸ் வழித்தடத்தை மெட்ரோ ரெயில் சேவைக்கு நிகராக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 15 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு மெட்ரோ ரயிலுடன் இணைகிறது சென்னை பறக்கும் ரயில் சேவை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-flying-train-project-to-be-connected-with-metro




