சென்னை, மதுபானம் குடித்த பிறகு காலிபாட்டில்களை சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் வீசுவதை தடுக்கும் வகையில், அவற்றை திரும்பப் பெறும் முறையை டாஸ்மாக் நடைமுறைப்படுத்தி உள்ளது. தற்போது இந்தப் பணியை தானியங்கி எந்திரங்கள் மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதுபான பாட்டில்களை தானாகப் பெற்றுக்கொள்ளும் எந்திரங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட உள்ளன. இந்த எந்திரத்தில் காலி பாட்டிலை செலுத்தினால், பாட்டில் சரிபார்க்கப்பட்டு, அதற்கான ரூ.10 ஊக்கத்தொகை நுகர்வோருக்கு வழங்கப்படும். சேகரிக்கப்படும் காலி பாட்டில்கள் வகைப்படுத்தப்பட்டு, மறுபயன்பாடு அல்லது மறுசுழற்சிக்கு அனுப்பப்படும். மறுபயன்பாட் டுக்கு ஏற்ற கண்ணாடி பாட்டில்கள் சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தியாளர்களிடம் திருப்பி வழங்கப்படும். மற்ற கண்ணாடி மற்றும் உலோகப் பொருட்கள் பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். இந்தப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தை தேர்வு செய்ய ரூ.50 கோடி மதிப்பில் தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த காலம் 7 ஆண்டுகள் ஆகும். இந்த டெண்டர் விண்ணப்பங்களை அக்டோபர் 5-ந்தேதி காலை 11 மணி வரை சமர்ப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/automated-machines-for-the-return-of-empty-liquor-bottles-tender-issued




