Fuld artikel
சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. இதன்படி கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எஸ்.பி.வேலுமணியை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். கட்சி அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமிக்கு கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனிடையே எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீண்டும் கட்சியில் இணைந்த நிலையிலும், அவருக்கு பழைய பதவி வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் கட்சியில் இணைந்தவர்களுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய பதவிகளை வழங்கினார். இதன்படி எஸ்.பி. வேலுமணிக்கு அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் என்ற மாநில அளவிலான பதவி வழங்கப்பட்டது. அதேசமயம் கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் என்ற பழைய பதவி வழங்கப்படவில்லை. அ.தி.மு.க-வின் கோவை புறநகர் தெற்கு மாவட்டம் என்பது, கோவை புறநகர் மத்திய மாவட்டம், புறநகர் தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. செ.ம.வேலுசாமி தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கோவை புறநகர் மத்திய மாவட்டச் செயலாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அப்பதவிக்கு செ.ம.வேலுசாமி நியமிக்கப்பட்டார். எஸ்.பி. வேலுமணி அ.தி.மு.க-வில் கோலோச்சிய வரை செ.ம.வேலுசாமிக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் கொடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தொண்டாமுத்தூரை உள்ளடக்கிய மத்திய மாவட்டச் செயலாளர் பதவி செ.ம.வேலுசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி.வேலுமணிக்கு மாநில அளவிலான பதவி வழங்கப்பட்டாலும், அது அதிகாரமில்லாத பதவி எனவும், இதனால் அவருக்கான அதிகாரங்கள் குறைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எஸ்.பி. வேலுமணியின் பழைய பதவியான புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை இரண்டாக பிரித்து, அவருக்கு எதிராக அரசியல் செய்து வரும் செ.ம.வேலுசாமி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வழங்கப்பட்டு இருப்பதும், அதிலும் அவரது சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் பொறுப்பாளராக செ.ம.வேலுசாமி நியமிக்கப்பட்டு இருப்பதும் எஸ்.பி.வேலுமணி தரப்பினரை அதிருப்தி அடைய செய்துள்ளது. திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் காலமானார்: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor



