Fuld artikel
முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor

Udgivet
25. jun. 2026
Kildenavn
Vikatan
Land
India
முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor

தமிழ்த் திரையுலகில் `திரைக்கதை மன்னன்’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் இயக்குநர், நடிகர், எழுத்தாளர் கே.பாக்யராஜ். 1980-களில் தமிழ் சினிமாவின் வணிக சமன்பாடுகளையும், கதை சொல்லும் பாணியையும் முற்றிலும் மாற்றி அமைத்த பெருமை இவருக்கு உண்டு. பிரமாண்டமான அதிரடிச் சண்டைகளோ, ஆடம்பரமான அரங்குகளோ இல்லாமல், அன்றாட மனிதர்களின் எளிய வாழ்க்கையையே மாபெரும் வெற்றிப் படங்களாக மாற்றிக் காட்டிய அசாத்திய கலைஞர். பாக்யராஜ் - ஊர்வசி ஒரு திரைப்படத்தின் மிக முக்கிய அஸ்திவாரம் அதன் திரைக்கதை என்பதைத் தமிழ் சினிமாவிற்கு ஆழமாக உணர்த்தியவர் பாக்யராஜ். இவருடைய கதைகளில் அசாத்தியமான திருப்பங்களோ, கற்பனைக்கு எட்டாத சம்பவங்களோ இருக்காது. மிகவும் சாதாரணமான ஒரு சூழலை எடுத்துக்கொண்டு, அதில் அடுத்தடுத்த காட்சிகளை சுவாரசியமாக சேர்ப்பதில் வல்லவர். படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதி காட்சி வரை தொய்வில்லாமல் ரசிகர்களைத் தன் கதையோடு பயணிக்க வைக்கும் வித்தை இவருக்கு மட்டுமே கைவந்த கலை. மிக நீளமான வசனங்கள் இல்லாமல், மக்கள் அன்றாடம் பேசும் எளிய மொழியில் கூர்மையான, சிந்திக்க வைக்கும் வசனங்களை எழுதினார். பாக்யராஜின் நகைச்சுவை என்பது தனியாக ஒரு காமெடி டிராக்காக வராமல், கதையின் ஓட்டத்தோடே இயல்பாகப் பயணிக்கும். சாப்பிடும் விதம், தையல் தைப்பது, முருங்கைக்காய் வாங்குவது, வாத்தியார் வேலைக்குச் செல்வது என மிகச் சாதாரண விஷயங்களைக்கூட நகைச்சுவையாக்கினார். 'இன்று போய் நாளை வா', 'மௌன கீதங்கள்', 'தாவணிக் கனவுகள்' போன்ற படங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்கள். அவரது நகைச்சுவையில் ஆபாசம் இருக்காது; மாறாக, மனிதர்களின் பலவீனங்களையும், சிறுபிள்ளைத்தனமான பொய்களையும் மையமாகக் கொண்டு ஆரோக்கியமான நகைச்சுவையை உருவாக்கினார். ரசிகர்களைச் சிரிக்க வைப்பதுடன், அந்தச் சூழலோடு அவர்களை உருக வைக்கவும் அவரால் முடிந்தது. பாக்யராஜ் - பாரதிராஜா தமிழ் சினிமாவில் பெண்களின் உணர்வுகளையும், அவர்களின் குடும்பப் பின்னணியையும் மிகவும் எதார்த்தமாகப் பிரதிபலித்தவர்களில் பாக்யராஜுக்கு முக்கிய இடமுண்டு. இவருடைய படங்களில் பெண்கள் வெறும் கவர்ச்சிப் பொருளாகவோ அல்லது பலவீனமானவர்களாகவோ காட்டப்படவில்லை. தங்களின் உரிமைகளுக்காகவும், காதலுக்காகவும், குடும்பத்திற்காகவும் தைரியமாக முடிவெடுக்கும் ஆளுமைகளாகச் சித்தரிக்கப்பட்டனர். கணவன்-மனைவி இடையே வரும் ஈகோ, குடும்பப் பொறுப்புகள், பெண்களின் மனக்குமுறல்கள் போன்றவற்றை மிக நாகரிகமாகவும், அதேசமயம் எதார்த்தமாகவும் கையாண்டார். இதனால் திரையரங்குகளில் பெண்களுக்கான பிரத்யேகக் காட்சிகள் திரையிடப்படும் அளவிற்கு இவருக்குப் பெண் ரசிகர்களின் ஆதரவு பெருகியது. ஒரு நடிகராக பாக்யராஜ் தனக்கென ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கினார். சிக்ஸ் பேக் உடலமைப்போ, அதிரடி சண்டைக்காட்சிகளோ இல்லாத ஒரு சராசரி மனிதனாகவே திரையில் தோன்றினார். அவரது அப்பாவித்தனமான முகம், கண்சிமிட்டல், கையை பிசைந்துகொண்டு பேசும் விதம் ஆகியவை ரசிகர்களுக்கு அவரைத் தங்களில் ஒருவராகப் பார்க்க வைத்தது. மிக மெதுவாக, நிதானமாக, வீட்டில் உள்ளவர்களிடம் பேசுவது போன்ற அவரது எதார்த்தமான பேச்சுவழக்கு கதாபாத்திரங்களுக்கு கூடுதல் உயிரூட்டியது. இதன் காரணமாகவே, 'சுவரில்லாத சித்திரங்கள்', 'அந்த 7 நாட்கள்' போன்ற படங்களில் இவருடைய நடிப்பு இன்றும் பேசப்படுகிறது. எம்.ஜி.ஆர் - பாக்யராஜ் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், கே.பாக்யராஜை அதிகாரபூர்வமாகத் தனது `கலை வாரிசு’ என்று அறிவித்தது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு. "எனக்கென்று ஒரு பெரிய மாஸ், மக்கள் செல்வாக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆனது. ஆனால், இவ்வளவு சின்ன வயதில், மிகக் குறுகிய காலத்தில் பாக்யராஜுக்கு அந்த மாஸ் கிடைத்துள்ளது. சினிமாவில் நான் செய்ய நினைத்த நல்ல கருத்துகளையும், குடும்பங்கள் ரசிக்கும்படியான விஷயங்களையும் இவன் மிக அழகாகச் செய்கிறான்." என்று பாராட்டினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாக்யராஜ் தனது திரைப் பயணத்தின் தொடக்க காலத்தில் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னாளில் ஒரு வெற்றிகரமான இயக்குநராக உருவெடுத்த பாக்யராஜ், தனது குருநாதர் பாரதிராஜாவுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார். இவர்களது கூட்டணி தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படைப்புகளைத் தந்திருக்கிறது. பாக்யராஜ் கே.பாக்யராஜ் வெறும் இயக்குநர், நடிகர் மட்டுமல்ல; அவர் தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம். மிக எளிய மனிதர்களின் கதைகளை உலகளாவிய தரம் கொண்ட திரைக்கதையாக மாற்ற முடியும் என்று நிரூபித்தவர். தலைமுறைகள் கடந்தும் அவரது திரைக்கதை நுணுக்கங்கள் இன்றுவரை வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களுக்கு ஒரு சிறந்த பாடப்புத்தகமாக விளங்குகின்றன. அந்த மகா கலைஞனின் அபாரமான உழைப்பிற்கும், தமிழ் சினிமாவிற்கு அவர் வழங்கிய எக்காலத்திற்கும் பொருந்தும் படைப்புகளுக்கும் தலைவணங்கி, அவருக்கு நமது அஞ்சலியைச் செலுத்துவோம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் கே. பாக்யராஜ். பாக்யராஜ் இயக்கிய படங்கள்தான், இன்று சினிமா படிக்கும் மாணவர்களுக்குத் திரைக்கதைக்கான மாஸ்டர் கிளாஸ்! Bhagyaraj பாக்யராஜை ஈர்த்த திரைக்கதையாசிரியர்கள் பற்றி 2019-ல் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் பாக்யராஜ் பகிர்ந்திருக்கிறார். ஆனந்த விகடனின் 'குரு சிஷ்யன்' தொடருக்காக, இயக்குநர் மற்றும் நடிகர் பாண்டியராஜன், பாக்யராஜைப் பேட்டி கண்டார். அந்தப் பேட்டியில் அவரை ஈர்த்த திரைக்கதையாசிரியர்கள் பற்றி அவர் பகிர்ந்திருக்கிறார். அவர், "என்னை ஈர்த்த திரைக்கதையாசிரியர்கள் பல பேர் இருக்காங்க. உதாரணத்துக்கு, மாரி செல்வராஜ்! ‘பரியேறும் பெருமாள்’ படத்துல செத்துப்போயிட்டான்னு நினைச்ச பொண்ணு இன்னும் உயிர்த்துடிப்போடதான் இருக்கான்னு தெரிஞ்சதும், துணியைப் போர்த்திக் கொல்லுற ஒரு காட்சியில மொத்தப் படத்தோட எமோஷனையும் வச்சிருப்பார். Bhagyaraj ஆணவக் கொலையை அதைவிடச் சிறப்பா உணர்த்திட முடியாது. அப்பா-பொண்ணுக்கு நடுவுல இருந்த பாசத்தை மனதைத் தொடுகிற மாதிரி திரைக்கதையில டைரக்டர் சிவா கொடுத்ததுதான் விஸ்வாசம் வெற்றிக்குக் காரணம். ‘தடம்’, ‘இமைக்கா நொடிகள்,’ ‘கோலமாவு கோகிலா’ன்னு ஒவ்வொரு ஜானர்லயும் பல படங்களை அடுக்கிக்கிட்டே போவேன்,” எனப் பகிர்ந்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பாக்யராஜை, எம்.ஜி.ஆர் தன்னுடைய கலையுலக வாரிசு எனக் குறிப்பிட்டிருக்கிறார், எம்.ஜி.ஆருடனும் நெருக்கமாக பயணித்திருக்கிறார் பாக்யராஜ். Bhagyaraj ஆனந்த விகடனின் 'குரு சிஷ்யன்' தொடருக்காக இயக்குநர் மற்றும் நடிகர் பாண்டியராஜன், அவருடைய குரு பாக்யராஜைப் பேட்டி கண்டார். அந்தப் பேட்டியில், "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சார் எப்போதெல்லாம் உங்க வீட்டுக்கு வருவார், எப்படியெல்லாம் உங்ககிட்ட பேசுவார்னு உங்க அசிஸ்டென்ட்டான எனக்கு நல்லாவே தெரியும். உங்களுக்கு, எம்.ஜி.ஆரிடம் ஏதாவது கேட்கணும்னு நினைத்து, கடைசிவரை கேட்க முடியாமற்போன கேள்வி ஏதாவது இருக்குதா?” எனக் கேட்டார். இதற்கு பாக்யராஜ், "தலைவருக்குத் திடீரென்று உடல்நிலை சரியில்லாமற்போனவுடனேயே முதலில் சென்னை அப்போலோவில் அட்மிட் பண்ணியிருந்தோம். விஷயம் தெரிந்து பிரதமர் இந்திரா காந்தி நேரடியாக ஆஸ்பத்திரிக்கே வந்துட்டாங்க. வெளிநாட்டுக்கு உடனே சிகிச்சைக்கு அனுப்பச் சொல்லி மத்திய அரசாங்கச் செலவிலேயே தலைவரோட மொத்த ட்ரீட்மென்ட்டையும் பார்த்துக்கிட்டாங்க. அமெரிக்காவிலிருந்து தலைவர் குணமாகி வர்றதுக்கு முன்னாடியே இந்திரா காந்தியம்மாவைச் சுட்டுக் கொன்னுட்டாங்க. தலைவர் சென்னை திரும்பியதும் இந்திரா காந்தி உதவி செய்த விஷயத்தைச் சொன்னோம். அப்போதான் குணமாகி வந்திருக்காரேன்னு இந்திரா அம்மா இறந்ததைப்பற்றி மட்டும் சொல்லலை. இந்திரா காந்தி எடுத்துக்கிட்ட மெனக்கெடல்களுக்காக நன்றி சொல்லணும்னு தலைவர் விரும்பினார். என்னிடம் இந்திரா காந்திக்கு ஃபோன் போடச்சொல்லி வற்புறுத்திக்கிட்டே இருந்தார். ஒரு கட்டத்துல சமாளிக்க முடியாம இந்திரா காந்தி இறந்த விஷயத்தைப் பொறுமையாக எடுத்துச் சொல்லிட்டேன். அடுத்த நிமிஷமே நொறுங்கிட்டார். அதன்பிறகு ரெண்டு நாளா சரியா தூங்காம, சாப்பிடாம அந்த அம்மா இறந்த துக்கத்திலேயேதான் இருந்தார். புரட்சித்தலைவர் வழக்கமாக ஜிப்பா, குல்லா, கூலிங்கிளாஸ் சகிதமான தோற்றத்தோடுதான் எல்லாரையுமே சந்திச்சுப் பேசுவார். அவர் இறப்பதற்கு முன்னாடி ஒருமுறை தோட்டத்துக்குத் தலைவரைப் பார்க்கப் போயிருந்தேன். மாடியில் பெட்ரூமில் படுத்திருந்தவர்கிட்ட தகவல் சொன்னதும் என்னை மாடிக்கு வரச்சொன்னார். Bhagyaraj உள்ளே போனதும் தொப்பி அணியாம, கண்ணாடி போடாம, சில்க் ஜிப்பா இல்லாம, பனியன் போட்டு, கைலி கட்டிக்கிட்டு படுத்துட்டிருந்தார். எதிரே இருந்த சேரில் உட்காரப்போன என்னை தன் பெட்டுக்குப் பக்கத்துல வந்து உட்காரச் சொன்னார். தலைவரோட காலைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி. “தலைவரே... கால் ரொம்ப வீங்கியிருக்கு. ஏன் எல்லா வேலையையும் நீங்களே இழுத்துப்போட்டுச் செய்யுறீங்க. நம்பிக்கையான ஒருத்தரை வெச்சிக்கிட்டு அவருகிட்ட பொறுப்பை ஒப்படைக்க வேண்டியதுதானே”ன்னு உரிமையா கேட்டேன். `என் வேலையை நான்தான் பார்க்கணும், வேற யார் இருக்காங்க சொல்லுங்க?’ன்னு திருப்பிக் கேட்டார். பதில் சொல்ல முடியாம திணறிப் போயிட்டேன். ‘நான் இருக்கேன் தலைவரே’ன்னு அப்ப நான் ஏன் சொல்லலைன்னு இப்பவும் நினைக்கிறதுண்டு. அப்போ ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதான்னு ரெண்டு பேருக்கும் அ.தி.மு.க-வில் கடுமையான போட்டி இருந்துச்சு. நான் தலைவரிடம் ‘நீங்க யாரையாவது ஒருத்தரை அடையாளம் காட்டலாமே’ன்னேன். “நான் எப்படிச் சுயமா போராடி வந்தேனோ அதே மாதிரி அவங்களும் வரட்டும். நான் யாரையுமே அடையாளம் காட்ட மாட்டேன்’னு சொல்லிட்டார்," என பதிலளித்திருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

தமிழ்த் திரையுலகில் இயக்குநர், நடிகர், வசனகர்த்தா என பன்முகத் திறன் வாய்ந்த, திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்ட கே.பாக்யராஜ் காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Hold dig informeret med de seneste nyheder fra pålidelige kilder