சென்னை, இந்தோனேஷியா நாட்டின் உயரிய குடிமை விருதான 'பிந்தாங் அதிபூர்ணா' விருதைப் பெற்ற மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, 140 கோடி இந்தியர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி நேற்று இந்தோனேசியா சென்றார். உற்சாக வரவேற்பு இந்தோனேசியா அரசு சார்பில் போர் விமானங்கள் புடைசூழ பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். அதிபர் பிரபோவோ சுபியாந்தோ இதை தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு அரசு முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை, அதிபர் பிரபோவோ சுபியாந்தோ பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்து வைத்தார். தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- பிந்தாங் அதிபூர்ணா விருது இந்தோனேசியா நாட்டின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருதை பெற்ற பிரதமர் மோடிக்கு 140 கோடி இந்தியர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நிர்வாக திறன் தங்களின் சிறந்த நிர்வாக திறன், வலிமையான வெளியுறவு கொள்கை மற்றும் உலக நாடுகளுடனான நல்லுறவால், இந்தியாவின் பெருமை உலக அரங்கில் தொடர்ந்து உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் கலாச்சாரம், பொருளாதாரம், வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் இந்தியாவின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் பிரதமர் மோடி மீண்டும் நன்றிகளை உரித்தாக்குகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா நாட்டின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருதைப் பெற்ற மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. அவர்களுக்கு 140 கோடி இந்தியர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் சிறந்த நிர்வாகத் திறன், வலிமையான வெளியுறவுக் கொள்கை… — Vanathi Srinivasan (@VanathiBJP) July 7, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-expresses-gratitude-on-behalf-of-14-billion-indians-to-prime-minister-modi-for-receiving-the-bintang-adipurna-award




