சென்னை, விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புது டெல்லியில் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகின்றனர். இது தொடர்பாக காக்ரோச் ஜனதா பார்ட்டி நடத்திய பேரணியில் மோடி அரசின் காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள், இளைஞர்கள் மீது ஏவப்பட்ட கண்மூடித்தனமான வன்முறையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் ஜூலை 27 திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். வினாத்தாள் கசிவு தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் ஆனதற்குப் பிறகு நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் 152 முறை கசிந்து, பலமுறை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு சுமார் ஏழரை கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். “கல்வித் துறையைச் சீரழிக்கும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்று மாணவர்கள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். அண்மையில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள காக்ரோச் ஜனதா பார்ட்டி நாடாளுமன்றம் நோக்கி பேரணி ஒன்றை அறிவித்தது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் ஆரம்பித்த ஜூலை 20ஆம் நாள் டெல்லியில் அந்தப் பேரணி அறிவிக்கப்பட்டது. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் இளைஞர்களும் அதில் பங்கேற்றனர். அந்தப் பேரணியைத் தடுப்பதற்கு வரலாறு காணாத அளவில் டெல்லியின் வீதி தோறும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். பேரணியில் பங்கேற்ற மாணவர்களையும் இளைஞர்களையும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியால் அடித்தும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர். சீருடை அணியாத சில குண்டர்கள் தடிகளை ஏத்தி மாணவர்களைத் தாக்கிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாயின. காயம்பட்ட மாணவர்களை நேரில் சென்று விசாரித்த போது அவர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மாணவர்கள் தெரிவித்தனர். மீண்டும் போராட்டம் மாணவர்களை சிவில் உடையில் வந்து யார் தாக்கியது என்பதைப் பற்றி இதுவரை டெல்லி காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் கை,கால்களில் முறிவு ஏற்பட்டும், தலையில் காயம் அடைந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறு காயங்களோடு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதை இதுவரை காவல் துறை தெரிவிக்கவில்லை. அவர்களைச் சந்திப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவும் இல்லை. இதற்காக நீதி கேட்டு பிரதமர் இல்லத்துக்கு முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் எம்பிக்களும் காவல்துறையினரால் மோசமாக நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மோடி அரசு முற்றிலும் ஒரு சர்வாதிகார அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. ஜனநாயக மாண்புகள் படுகொலை செய்யப்பட்டுள்ளன. போராடிவரும் மாணவர்களின் கோரிக்கைகளான கல்வி அமைச்சர் தர்மேந்தர பிரதான் பதவி விலக வேண்டும்; போராடிய மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்; இது தொடர்பாக பிரதமர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - ஆகியவற்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும்; மாநில அரசுகளே மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. ஆர்ப்பாட்டம் மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தும், அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜூலை 27 ஆம் தேதி திங்களன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம். அதில் ஜனநாயக சக்திகளும் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/protests-across-tamil-nadu-on-july-27-against-neet-question-paper-leak




