சென்னை, தங்கம் விலை காலை மற்றும் பிற்பகலில் விலை மாற்றம் இருந்து வருகிறது. சில நேரங்களில் பிற்பகல் என்பது மாலை நேரங்களில் கூட விலை மாற்றம் காணப்படுவதை பார்க்க முடிகிறது. இந்த சூழலில் நேற்று ஒரே நாளில் 3 முறை விலை மாற்றம் இருந்தது. நேற்று 3 முறை மாற்றம் காலையில் கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் குறைந்திருந்தது. பின்னர் மாலையில் மேலும் கிராமுக்கு ரூ.130-ம், பவு னுக்கு ரூ.1,040-ம் குறைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே 2-வது முறையாக மாற்றம் செய்யப்பட்ட விலை குறித்த தகவல்கள் அகற்றப்பட்டு, கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் மட்டுமே குறைந்ததாக சொல்லப்பட்டது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 3 முறை விலை மாற்றம் கண்டு, மொத்தத்தில் கிராமுக்கு ரூ.150-ம், பவுனுக்கு ரூ.1,200-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. இன்றைய தங்கம் விலை தங்கம் விலை இன்று காலை குறைந்தது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-ம், பவுனுக்கு ரூ.240-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 220-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-ம், பவுனுக்கு ரூ.800-ம் அதிகரித்தது, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 320-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-fell-in-the-morning-and-rose-in-the-evening-2




