மும்பை, கிரிக்கெட் பயணத்தில் தனது முதல் சம்பளம் ரூ.15,000 என்று டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் ஒருவர் கூறி இருக்கிறார். சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 கிரிக்கெட் அணியை கேப்டனாக வழிநடத்தி உலகக் கோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவ், சுமாரான பார்ம் காரணமாக தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படாததும், அடுத்த டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணி நிர்வாகம் மேற்கொண்டு வரும் இரண்டு ஆண்டு திட்டமிடலும் அவரது நீக்கத்திற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. ரூ.15,000-ல் தொடங்கிய பயணம் இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற சூர்யகுமார் யாதவ், கிரிக்கெட் வாழ்க்கையில் தான் பெற்ற முதல் வருமானம் குறித்து பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, “மும்பை 15 வயதுக்குட்பட்டோர் (U-15) அணியில் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டு விளையாடியபோது எனக்கு ரூ.15,000 சம்பளமாக கிடைத்தது. அது முழு தொடருக்குமான தொகை. அந்த நேரத்தில் எனக்கு பேட் ஸ்பான்சர்கள் யாரும் இல்லை. எனவே, கிடைத்த முதல் வருமானம் முழுவதையும் கிரிக்கெட் உபகரணங்கள் வாங்குவதற்காகவே செலவிட்டேன்.” என்றார். சாதாரண பின்னணியில் இருந்து தொடங்கி, கடின உழைப்பின் மூலம் இந்திய டி20 அணியின் கேப்டன் வரை உயர்ந்த சூர்யகுமார் யாதவின் இந்த பேட்டி தற்போது கவனம் பெற்றுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/this-t20-world-cup-winning-captain-got-rs-15000-as-first-salary-for-entire-season-i-spent-it-all




