சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் 2-ம் சுட்ட திட்டப் பணிகள் 5 வழித்தடங்களில் நடை பெற்று வருகிறது. இதில் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்க தயாராக உள்ளது. பூந்தமல்லி கலங்கரை விளக்கம் வரை உள்ள இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் போரூர் வரை அனைத்து பணிகளும் முடிந்து ரெயில்களை இயக்குவதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கான உத்தரவு வரவில்லை. இதனால் 4 மாதமாக வழித்தடத்தில் சேவையை தொடங்க முடியாமல் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வழித்தடத்தில் போரூர் சந்திப்பு முதல் பவர் ஹவுஸ் வரையிலான உயர் மட்ட பாதையில் 91 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது கட்டிட அலங்காரப் பணிகள் மற்றும் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சுரங்கப்பாதையில் 54 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அங்கு ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு தேவையான 35 ரெயில்கள் சென்னைக்கு வந்துள்ளன. பூந்தமல்லியில் உள்ள பணிமனையில் இந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சோதனை ஓட்டங்களும் நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/35-new-metro-trains-arrive-in-chennai



