அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள படம் ‘டிசி’. கடந்த 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தில் வாமிகா கேபி நாயகியாக நடித்திருக்க, சஞ்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். DC | டிசி அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவரது இசையில் வெளியானப் பாடல்கள் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் அனிருத் கலந்துகொண்டிருக்கிறார். அவரிடம் லோகேஷ் கனகராஜ் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. "இதை அவர் 12 வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னார்!" - நிவின் பாலி வீடியோவை பகிர்ந்த அனுபமா அதற்கு பதிலளித்த அனிருத், " லோகேஷும் நானும் பல வருடங்களாக பழகி வருகிறோம். தென்னிந்திய ரசிகர்களுக்கு எங்கள் கூட்டணி மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். அதனால் அவர் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்று தெரிந்ததும், எனது முதல் ரியாக்ஷன் 'ஏன் நீங்க நடிக்க வரணும்?' என்பதுதான் (சிரித்துக்கொண்டே). லோகேஷ் கனகராஜ் ஆனால் இப்போது, குறிப்பாக இயக்குநர் அருணுடன் சேர்ந்து எல்லாமே சிறப்பாக அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். லோகேஷைப் பொறுத்தவரை என்னுடைய வேலையை சுதந்திரமாக செய்ய விடுவார். அவரிடமிருந்து கதையைக் கேட்பேன், அவர் எனக்கு கதை சொல்வார். மேலும் அவர் ஷூட் செய்யும்போதெல்லாம் சில காட்சிகளை எனக்குக் காட்டுவார். அதைத் தவிர, இசை விஷயத்தில் நாங்கள் பெரிதாக எதுவும் விவாதிப்பதில்லை. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிடுவார்" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/anirudh-about-lokesh-kanagaraj




