சென்னை, வீட்டுவசதி வாரியத்தால், சுயநிதி திட்டத்தின் கீழ், மாநிலத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், சுயநிதி திட்டத்தின் கீழ், மாநிலத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று 2026-2027 ஆம் ஆண்டு கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கை கூட்டத் தொடரின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேற்கண்ட அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை மாவட்டம் - அண்ணா நகர், புரசைவாக்கம், நந்தனம் மற்றும் எர்ணாவூர், கடலூர் மாவட்டம் - குண்டுசாலை, மதுரை மாவட்டத்தில் எல்லீஸ் நகர், திருவள்ளூர் மாவட்டம் - திருமழிசை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் - வல்லன்குமாரவில்லை ஆகிய இடங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப குடியிருப்புகள் கட்டப்படும். பிரத்யேக இயங்குதளம் மேலும், இத்திட்டங்களை திட்டமிடும் முன், பொதுமக்களின் கேட்பினை (Demand Assessment) அறிந்து, அவர்களின் தேவைக்கேற்ப குடியிருப்புகள் அமைப்பதற்காக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ( ஒரு பிரத்யேக இயங்குதளத்தை (Portal) உருவாக்கியுள்ளது. மேற்கண்ட இயங்குதளத்தின் மூலம், பொதுமக்கள் தங்களின் விருப்ப இடம், குடியிருப்பு வகை மற்றும் தொடர்புடைய பிற தேவைகளை பதிவு செய்யலாம். பெறப்படும் இந்தப் பதிவு பொதுமக்களின் தேவையை மதிப்பீடு செய்வதற்காக மட்டுமே தவிர வீடு ஒதுக்கீடு பெறுவதற்கான எந்தவொரு முன்னுரிமையும் வழங்கப்படமாட்டாது. ஆனால், மேற்படி மதிப்பீட்டுப் பதிவை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளவர்களுக்கு திட்டம் செயல்படுத்தப்படும்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதற்கான தேதி விவரங்கள் குறுஞ்செய்தி மூலமாக பதிவு செய்த எண்ணிற்கு தெரிவிக்கப்படும். எனவே, மேற்கண்ட பகுதிகளில் குடியிருப்புகள் பெற ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இணையதளத்தை ( அணுகி, தங்களின் கேட்பினை விரைவாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-housing-in-5-districts-including-chennai-cuddalore-madurai-minister-rajkumar




