பிரஜ்ஜாவில்லே காங்கோவில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எபோலா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் கடந்த மே மாத மத்தியில் எபோலா பாதிப்பு பரவல் தெரிய வந்தது. அது தொடர்ந்து பரவி, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுபற்றி காங்கோ சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இதுவரை 8,067 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 3,901 பேர் பலியாகி உள்ளனர். எபோலா பாதிப்புக்கான உயிரிழப்பு விகிதம் 48.4 சதவீதம் என்ற அளவில் உள்ளது என தெரிவித்து உள்ளது. 7 மாகாணங்கள் இந்த பாதிப்பு அதிக அளவாக அந்த நாட்டின் 7 மாகாணங்களில் உள்ள 63 சுகாதார மண்டலங்களில் பரவலாக பரவி காணப்படுகிறது. இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 76.4 சதவீதம் ஆகும். உலகிலேயே மிக கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றான இது உடலின் உட்புற உறுப்புகளில் கடுமையான ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணம் ஆகியவற்றை ஏற்படுத்த கூடும். காங்கோவின் அண்டை நாடுகளான உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவியிருக்கும் என அஞ்சப்படுகிறது. இதனை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பு சார்பில், உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பரவலுக்கு காரணம் பண்டிபக்யோ என்ற வைரஸ் என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரசுக்கு நோய் தடுப்பு மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ எதுவும் இல்லை. தொடர்ந்து காங்கோவில் மருத்துவ பரிசோதனைகளும் நடந்து வருகின்றன. இதுபோன்ற தீவிர பாதிப்புகளால் அது பிற நாடுகளுக்கு பரவுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/congo-3901-deaths-8000-ebola-cases-confirmed




