சென்னை, தமிழக சட்டசபையின் மாற்று பேரவை தலைவராக (மாற்று சபாநாயகர்) தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு தொகுதி பெண் எம்.எல்.ஏ. சத்யபாமா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று முதன்முறையாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வெற்றிகரமாக வழிநடத்தினார். மாற்று தலைவர்கள் குழு தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வழக்கமாக, சட்டசபை நிகழ்வுகளை சபாநாயகர் வழிநடத்துவார். அவர் அவையில் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் அவையை நடத்துவார். சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகிய இருவருமே அவையில் இல்லாத சூழ்நிலை ஏற்படும்போது, அவையை தடையின்றி நடத்துவதற்காக 'மாற்று தலைவர்கள் குழுஅமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போதைய சட்டசபையின் மாற்று பேரவை தலைவர்கள் பட்டியலை சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த தலைவர்கள் குழுவில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு தொகுதி பெண் எம்.எல்.ஏ. சத்யபாமா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். சபாநாயகர் இருக்கையில் சத்யபாமா இந்நிலையில், இன்று சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருந்தபோது, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகிய இருவரும் தற்காலிகமாக அவையில் இல்லை. இதனை தொடர்ந்து, மாற்று பேரவை தலைவரான தவெக எம்.எல்.ஏ. சத்யபாமா, சபாநாயகர் நாற்காலியில் சென்று அமர்ந்தார். பின்னர் அவர், சட்டசபை விவாதங்களை நடுநிலையோடு திறம்பட அவையை தொடர்ந்து வழிநடத்தினார். தவெக கட்சியின் சார்பில் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அமைச்சர்கள் குழப்பமும், பாராட்டும் சத்யபாமா அவையை நடத்தி கொண்டிருந்தபோது, விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஒருவர், அவரை தவறுதலாக "துணை பேரவை தலைவர்" என குறிப்பிட்டு பேசினார். உடனே அவையில் இருந்த உறுப்பினர்கள், "அவர் துணை பேரவை தலைவர் இல்லை, மாற்று பேரவை தலைவர்" என்று சுட்டிக்காட்டி சரிசெய்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கலகலப்பு ஏற்பட்டது. பாராட்டு சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து மிகவும் பொறுமையாகவும், கம்பீரமாகவும் அவையை வழிநடத்திய தவெக பெண் எம்.எல்.ஏ. சத்யபாமாவின் செயல்பாட்டை, திமுகவை சேர்ந்த தங்கம் தென்னரசு பேசியதாவது, "லேடி வெல்லிங்டன் இந்த சட்டப்பேரவைக்கு வழங்கிய ஆசனத்தில் ஒரு பெண்மணி பேரவை தலைவராக அமர வேண்டும் என்பது நீண்ட காலமாக எல்லோரிடத்திலும் இருக்கும் எதிர்பார்ப்பு. இன்றைக்கு மாற்று தலைவராக நீங்கள் அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்க்கும்போது உள்ளபடியே பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார். பல்வேறு கட்சி மக்கள் பிரதிநிதிகளும் மனதார பாராட்டினர். மாற்று பேரவை தலைவர்கள் குழு இந்த மாற்று பேரவை தலைவர்கள் குழுவில் சத்யபாமாவுடன் சேர்த்து, தவெகவை சேர்ந்த விஜய் சரவணன், மதார் பதுருதீன் ஆகியோரும், திமுக தரப்பில் காதர் பாட்சா முத்துராமலிங்கம், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/sathyabama-first-woman-in-speaker-chair-tamil-nadu-assembly




