மதுரை, உசிலம்பட்டி மாணவி தற்கொலை விவகாரத்தில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாணவி தற்கொலை மதுரை தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்தவர், மாணவி நிஷாந்தி. இவர், உசிலம்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விமலாதேவியின் செயலால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. பொறுப்பற்ற முறையில் அதையடுத்து கல்வி மாவட்ட அலுவலர் நடத்திய விசாரணையில், மாணவியின் பெற்றோரை கை கட்டி நிற்க வேண்டும் என்றோ, மாணவியின் சமூகம் குறித்தோ தலைமை ஆசிரியை விமலாதேவி எதுவும் பேசவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இருப்பினும், மாணவியின் பெற்றோரிடம் கடினமாக நடந்து கொண்டது தெரியவந்தது. மாணவியின் பெற்றோரிடம் பொறுப்பற்ற முறையில் நடந்துள்ளார். மாணவியின் முன்பாக அவர் ஏற்கனவே படித்த பள்ளியில், அவரின் கல்வி குறித்த விவரங்களை கேட்டிருக்கக்கூடாது. சஸ்பெண்ட் பொதுவாக புகார் தெரிவிக்க வரும் யாராக இருந்தாலும், உதவி தலைமை ஆசிரியர் மூலம் பிரச்சினையை விசாரித்து அதன் பின்னரே என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை தலைமை ஆசிரியர் முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியை சற்று கவனக்குறைவாக நடந்தது கல்வித்துறை விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து, அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தயாளன் உத்தரவிட்டுள்ளார். 3 நிமிடங்கள் மட்டுமே இது குறித்து அவர் கூறியதாவது:- தலைமை ஆசிரியை குறித்து தெரிவிக்கும் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. அவர் இந்த பள்ளிக்கு பணியிட மாற்றம் பெற்று வந்து சில மாதங்களே ஆகிறது. மாணவி நிஷாந்தியும் அந்த பள்ளிக்கு முதன்முதலாக சேர்க்கை கேட்டு சென்றுள்ளார். வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே மாணவியின் பெற்றோரிடம் தலைமை ஆசிரியை பேசியுள்ளார். மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு தலைமை ஆசிரிையயின் செயல்பாடு மட்டும் காரணம் இல்லை என்பது தெரியவருகிறது. அந்த மாணவி 10-ம் வகுப்பில் 415 மதிப்பெண் பெற்று அரசினர் கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் உயிரியல், கணித பாடப்பிரிவில் சேர்க்கை பெற்றுள்ளார். நர்சிங் படிக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்துள்ளது. வழக்குப்பதிவு ஆனால், பாடப்பிரிவு கடினமாக இருப்பதால் வணிக பாடப்பிரிவுக்கு மாற்றம் கேட்டு இந்த பள்ளியில் சேர்க்கை விண்ணப்பம் கொடுத்துள்ளார். இருப்பினும் மாணவி உயிரிழப்பு என்பது மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வாகும். மாணவியின் தாயார் தவமணி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள உசிலம்பட்டி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையிலும் இந்த விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆலோசனைக்கூட்டம் இருப்பினும் துறைரீதியான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களிடம் புகார் கூற மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பெற்றோர் மற்றும் பிறரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/usilampatti-student-suicide-case-government-school-headmistress-suspended




