Fuld artikel
கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் கௌரவத் தலைவர் அட்லஸ் M.நாச்சிமுத்து மற்றும் தலைவர் P.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. meeting இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பேசுகையில், “கரூர், தமிழ்நாட்டின் ஜவுளித் தலைநகரம் மட்டுமல்ல, இந்தியாவின் முக்கிய ஜவுளி மையங்களில் ஒன்றாகும். இது, சுமார் 7 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. தற்போது, ஜவுளி பரிசோதனை மற்றும் சான்றளிப்புக்காக உற்பத்தியாளர்கள் திருப்பூர் அல்லது குருகிராமிற்குச் செல்ல வேண்டியுள்ளது. அத்தகைய பரிசோதனை மற்றும் சான்றளிப்பு வசதி விரைவில் கரூரிலேயே அமைக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். தமிழகத்தில் இருந்து குறிப்பாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் இருந்து ஜவுளி ஏற்றுமதி வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவது நாட்டுக்கே பெருமை அளிக்கிறது. ஜவுளி தொழிலாளர் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருவது விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி தொழில் பெண்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதாரத்தை வழங்கி வருகிறது. ஒரு நாடு மிகப்பெரிய முன்னேற்றம் அடைவதற்கு பெண்களின் பொருளாதாரத் தன்னிறைவு மிக அவசியம். இதனால்தான், இந்தியப் பிரதமர் பெண்களின் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்திய நாட்டின் உற்பத்தி பொருள்கள் உலக அளவில் மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. அதில் ஜவுளி உற்பத்தி பொருட்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) ஜோதிமணி மற்றும் அவரது காங்கிரஸ் கட்சி முந்தைய அரசாங்கத்திலும் இருந்தனர். இப்போது, தற்போதைய ஆளும் TVK அரசாங்கத்திலும் இருக்கிறார்கள் என்பதால், எனக்கு மத்திய அமைச்சராக வேலை குறைவு" என்றார் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; பரபரக்கும் கரூர்! இந்த விழாவில், பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி, கைத்தறித்துறை அமைச்சர் எம்.விஜய்பாலாஜி, கரூர் எம்.பி ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் டிவிகே எம்எல்ஏ சத்யா மற்றும் துறை சார்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேபோல், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன், இத்துறையின் 'விஷன் 2030' (Vision 2030) திட்டவரைவை விளக்கினார். இத்துறை குறுகிய காலத்தில் ரூ. 10,000 கோடி மொத்த உற்பத்தி மதிப்பை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், நீண்ட கால இலக்காக ரூ. 25,000 கோடியை இலக்காகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். giriraj singh மேலும், 'பாரம்பர்ய ஜவுளி ஏற்றுமதி ரூ. 7,000 கோடியிலிருந்து ரூ. 12,000 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படும் வேலையில், படுக்கை மற்றும் குளியல் ஜவுளிப் பிரிவு (bedding and bath textiles) ரூ. 4,000 கோடி பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப ஜவுளிகளும் (Technical textiles) ரூ. 4,000 கோடியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தி மூன்று முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டது. அதில் பன்முகத்தன்மையே (Diversification) முக்கிய கவனம்'' என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கூறினார். டெல்லி சிறப்புப் பிரதிநிதி: ``முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' - சிபிஐ வீரபாண்டியன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor




