சென்னை தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று பிற்பகலில் இருந்து, அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். மொத்தம் 38 அரசு அலுவலகங்களில் இந்த சோதனை வேட்டை நடந்தது. சென்னையை பொறுத்தமட்டில், சென்னை பல்லாவரம் மற்றும் ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோன்று, பல்லாவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் காட்டாத ரூ.1% லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.9 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. பூந்தமல்லி ஆர்.டி.ஓ. சோதனை சாவடியில் ரூ.25 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள தலைமை எலக்ட்ரிக்கல் ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையிdல் ஜி-பே மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட, ரூ.31.52 லட்சம் கைப்பற்றப்பட்டது. ரூ.1.18 கோடி ஸ்ரீபெரும்புதூர் பி.டி.ஓ. அலுவலகத்தில் ஜி-பே மூலம் வசூலான ரூ.2.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரொக்கமாக ரூ.4 ஆயிரம் சிக்கியது. தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடியே 18 லட்சத்து 14 ஆயிரம் கைப்பற்றப்பட்டு உள்ளது என்றும், அதில் ஜி-பே மூலம் மட்டும் பரிமாறப்பட்ட ரூ.89 லட்சத்து 89 ஆயிரம் சிக்கியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இதில், ரொக்கமாக மட்டும் ரூ.28 லட்சத்து 24 ஆயிரம் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற அதிரடி சோதனை வேட்டைகள், அரசு அலுவலகங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/throughout-tamil-nadu-vigilance-police-conduct-raids-in-government-offices-rs-1-18-crore-seized




