திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய வாலிபருக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த 17 வயதுடைய சிறுமிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்று உள்ளது. தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருக்கிறாள். திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக கிடைத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் இதுகுறித்து சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். மேலும் இந்த குழந்தை திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த வாலிபரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/pocso-case-registered-against-a-young-man-who-married-a-minor-girl




