அன்டிகுவா, கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. அன்டிகுவா - நெவிஸ் பேட்ரியாட்ஸ் மோதல் இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அன்டிகுவா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நெவிஸ் பேட்ரியாட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் துஷன் சனகா அதிகபட்சமாக 17 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். அன்டிகுவா தரப்பில் அந்த அணியின் ஸ்பிரிங்கர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அன்டிகுவா வெற்றி இதனை தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் அன்டிகுவா 19.3 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய இவின் லிவிஸ் 48 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-antigua-stun-nevis-patriots




