சென்னை, பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய், சட்டசபையில் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த அரசால் கைவிடப்படும். துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர்களிடம் கலந்தாலோசித்து, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவ்விடங்க ளின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்பந்தப் பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு, புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்த நிலையில், பரந்தூர் விவசாயிகள், விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது விவசாயிகள் முதல்-அமைச்சர் விஜய்க்கு பச்சை துண்டு அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/airport-project-cancelled-parandur-farmers-meet-chief-minister-vijay



