ஒவ்வோர் ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட மறுத்ததால் மேட்டூர் அணையில் போதுமான நீர் இல்லை. இதனால் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து உத்தரவிட்ட நிலையிலும் கர்நாடகாவில் கனமழை பெய்ததாலும் காவிரி நீர் கொஞ்சம் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டிய நிலையில் காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடிக்காக இன்று மேட்டூர் அணையை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். பாரம்பர்ய உடையில் சென்ற முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர். அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய், புது வெள்ளத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து மேட்டூர் அருகே உள்ள விவசாயி வீட்டிற்கு திடீரென சென்று முதல்வர் விஜய் பார்வையிட்டார். தங்களது வீட்டிற்கு வந்த முதலமைச்சர் விஜய்யின் கையைப் பிடித்து அழைத்துச் சென்ற மூதாட்டி செல்லத்துக்கு, விஜய் கூலிங் கிளாஸ் அணிவித்தார். சர்ப்ரைஸ் விசிட் அடித்த முதல்வர் மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்! - புது வெள்ளத்துக்கு மலர் தூவி மரியாதை! விஜய் சந்தித்தது குறித்துப் பேசிய மூதாட்டி செல்லம், "கண்ணு உன்ன ரொம்ப பிடிக்கும்'னு சொன்னேன். அவர் வந்தது ஆச்சர்யமாக இருந்துச்சு. பேச வார்த்தையே இல்ல" எனக் கூறி, நெகிழ்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/elderly-woman-gets-emotional-after-meeting-vijay




