மும்பை, நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ரூ. 30 ஆயிரம் கோடி மோசடி இதனிடையே, கடந்த ஆண்டு கோவாவை சேர்ந்த பெண் சைபர் மோசடியில் ரூ. 2.60 கோடி இழந்துள்ளார். இது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அந்த வழக்கு விசாரணையில் இதுபோன்று டிஜிட்டல் கைது, சைபர் மோசடி தொடர்பாக நாடு முழுவதும் ரூ. 30 ஆயிரம் கோடி அளவுக்கு ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 2 பேர் கைது இந்நிலையில், இந்த டிஜிட்டல் கைது, மோசடி தொடர்பாக 2 பேரை அமலாக்கத்துறை நேற்று கைது செய்துள்ளது. மும்பையை சேர்ந்த பஹிம் மொயின் ஹசன் சயது மற்றும் நயிம் மொயின் சயது ஆகிய 2 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மேலும், இந்த டிஜிட்டல் மோசடி கும்பலை சேர்ந்த எஞ்சியோரை அமலாக்கத்துறை தேடி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/rs-30-aayiram-kodi-cyber-mosadi-2-per-kaithu




