சென்னை, தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் விஜய் துணை நிற்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மத்திய ரெயில்வே துறை மந்திரி பதில் தமிழகத்தின் ரெயில்வே திட்டங்கள் மற்றும் தமிழக ரெயில்வே துறைக்கு மத்திய அரசு இதுவரை ஒதுக்கிய நிதி உள்ளிட்டவைகள் தொடர்பாக திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விகளுக்கு, எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ். 500 கிமீ வரை புதிய ரெயில் பாதை அதாவது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் தமிழகத்தின் ரெயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை காட்டிலும் 8 மடங்கு அதிக நிதி, மொத்தம் 19 புதியரெயில் திட்டங்கள், கிட்டத்தட்ட 500 கிமீ வரையிலான புதிய ரெயில் பாதைகள் உள்ளிட்ட பல வளர்ச்சித் திட்டங்கள் தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு வாரி வழங்கப்பட்டுள்ளன என்பதை அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒருமுறை எடுத்துக் கூறியுள்ளது மத்திய அரசு. திமுக அரசு அதுமட்டுமன்றி, மத்திய அரசின் மேலும் புதிய திட்டங்களுக்கு மொத்தம் 4,612 ஹெக்டேர் நிலங்கள் தேவைப்படும் நிலையில், முந்தைய திமுக அரசு அதில் வெறும் 26 சதவிதம் அதாவது 1,178 ஹெக்டேர் நிலங்களை மட்டுமே கையகப்படுத்திக் கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது மத்திய அரசு. மோதல் போக்கு எனவே, முந்தைய அரசை போல கண்மூடித்தனமான மோதல் போக்கை கடைபிடிக்காமல், ரெயில்வே திட்டங்களுக்கு தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி, தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு துணை நிற்குமாறு முதல்-அமைச்சர் விஜயை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-should-support-centre-on-tamil-nadu-infrastructure-nainar-nagendran




