சென்னை தமிழ்நாட்டில் இரண்டே இரண்டுக்குதான் போட்டி என்றும், ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு என்றும் மு.க. ஸ்டாலின் பேசினார். தி.மு.க. முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 15-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. விழா நடைபெற இருந்த நேரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து விழாவுக்கு மாற்று தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு தி.மு.க. முப்பெரும் விழா தொடங்கி நடந்தது. இந்த விழாவில் தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது மற்றும் முரசொலி செல்வம் விருது ஆகியவை வழங்கப்பட்டன. 7 பேருக்கு விருது 1. பெரியார் விருது - விவசாய அணி துணைச்செயலாளர் கு.செல்லப்பா. 2. அண்ணா விருது = சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே. சுபாஷ். 3. கலைஞர் விருது திருச்சி சிவா. 4. பாவேந்தர் விருது - கனிமொழி என் வி.என். சோமு 5. பேராசிரியர் விருது -மிசா எஸ். அகமது தம்பி. 6. மு.க.ஸ்டாலின் விருது நா. இளையராஜா. 7. முரசொலி செல்வம் விருது -ஊடகவியலாளர் ப. திருமாவேலன் ஆகிய 7 பேருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார். தொடர்ந்து அவர் கூட்டத்தின் முன் உரையாற்றினார். அப்போது அவர், விரலில் வைத்த மை காய்வதற்குள் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை திணித்திருக்கிறார்கள். குதிரை பேரம் நடத்தி இடைத்தேர்தலை திணித்ததுதான் மாற்றமா? மானங்கெட்ட மாற்றமா? என பேசியுள்ளார். தக்க பாடம் இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். எதிரி யார் என்று சரியாக கணித்து பணியாற்றி இருந்தால் இந்த தோல்வியே வந்திருக்காது. தி.மு.க. தன்னை மாற்றிக்கொண்டு கடுமையாக உழைக்கும் என்றார். சட்டசபையில் உதயநிதியின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்கல்லை. நல்ல வேளை சட்டப்பேரவை கொடுமைகளை பார்க்க நான் அங்கு இல்லை. கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி என்று கூறினார். ரீல்ஸ் கழகம் தொடர்ந்து அவர், தமிழ்நாட்டில் இரண்டே இரண்டுக்குதான் போட்டி. நன்றாக கவனியுங்கள். ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு. மக்கள், மின்வெட்டால் அவதியடைந்து வருகின்றனர். முதல்-அமைச்சர் தனது வாயால் சாப்பிட்டார் என த.வெ.க.வினர் ட்ரெண்ட் செய்கின்றனர். கோட் போட்டார் என்பதுதான் இப்போது ட்ரெண்டாக வருகிறது. தமிழக வெற்றிக்கழகம் என பெயர் வைத்ததற்கு பதிலாக அவர்கள் தமிழக ரீல்ஸ் கழகம் என பெயர் வைத்திருக்கலாம். விஜய் மக்கள் முன்பு நடிக்கிறார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு தற்போது மக்கள் முன்பு விஜய் நடித்து கொண்டிருக்கிறார். ஜென் சி இளைஞர்கள் தி.மு.க.வை பலவீனப்படுத்தும் முயற்சியை 78 ஆண்டுகளுக்கு மேலாக பார்த்து கொண்டிருக்கிறோம். வட்டியும் முதலுமாக திருப்பி தருவோம். அதற்காக தான் காத்திருக்கிறோம். த.வெ.க.வின் திமிருக்கும், ஆணவத்துக்கும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். ஜென் சி இளைஞர்களை கவர, அவர்களது மொழியிலேயே பேச வேண்டும். தமிழ்நாட்டைக்காப்போம், தமிழ்நாட்டை மீட்போம் என பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/only-two-competitions-in-tamil-nadu-one-power-cut-another-machete-attack-mk-stalin-speech




