ஐதராபாத் தெலுங்கானாவில் சாலை விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்து டாக்டர் உயிருடன் கருகி பலியாகி உள்ளார். தெலுங்கானாவின் சூரியபேட்டை மாவட்டத்தில் ஐதராபாத்-கம்மம் நெடுஞ்சாலையில் பில்லாலமர்ரி பாலத்தில் இன்று காலை கார் ஒன்று விரைவாக வந்து கொண்டிருந்தது. அந்த கார் சாலை தடுப்பானில் மோதி விபத்தில் சிக்கியது. டாக்டர் இதில், கார் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதனால், காரில் இருந்த நபரால் வெளியே வர முடியவில்லை. இந்த சம்பவத்தில், அவர் உயிருடன் எரிந்து பலியானார். காருடைய பதிவெண் அடிப்படையில் பலியானவர் நரம்பியல் டாக்டர் ஜெகதீஷ் என்பதும் அவர் கம்மம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. அவர், கம்மம் மாவட்டத்தில் இருந்து குடும்பத்தினரை சந்திப்பதற்காக ஐதராபாத் நோக்கி காரை ஓட்டி வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/telungana-road-accident-car-catches-fire-doctor-burnt-alive




