சென்னை, சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த விசைபடகு உரிமையாளர்கள் கணேசன் மற்றும் கர்ணன் என்பவருக்கு சொந்தமான 2 விசைபடகுகளில், மீன்பிடி தடை காலம் நிறைவு பெற்ற கடந்த 15-ம் தேதி 19 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்க சென்ற இவர்களை, ஆந்திர கடல்சார் (மரைன்) போலீசார் சிறைபிடித்துள்ளனர். மேலும் அவர்கள் சென்ற இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத் தரக்கோரி மீனவர்கள் காசிமேட்டிலும், சென்னை மீன்வளத்துறை அலுவலகத்திலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆந்திர அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்கக் கோரி சென்னை காசிமேட்டில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுதால் ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermens-strike-in-chennais-kasimedu




