ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நடிக்கும் 'சூர்யா 47' படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. சூர்யா 47 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, பிரபல மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போலீஸ் அதிகாரி 'ஆவேஷம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'சூர்யா 47' படத்துக்கு 'சீன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் 'சீன்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் உற்சாகம் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் வெளியாகும் 3-வது திரைப்படம் என்பதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/diwali-release-surya-47-title-glimpse-video-released




