சென்னை, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 94. இந்த நிலையில் சவுகார் ஜானகியின் மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்த் திரையுலகின் தனித்துவமிக்க பழம்பெரும் நடிகையும், திரைப்படத் துறையில் மட்டுமின்றி நாடகத் துறையிலும் கோலோச்சி, தனது முத்திரையைப் பதித்தவருமான பத்மஸ்ரீ சவுகார் ஜானகி இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் தான் ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் பெருமை சேர்த்த சவுகார் ஜானகியை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/saukkaar-janaki-demise-causes-grief-ttv-dhinakaran-condolence




