நடிகர் அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அசோக் செல்வன் தற்போது ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துள்ளார். இப்படம் அசோக் செல்வனின் 23-வது படமாகும். இப்படத்தில் நடிகை பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் படத்தை இயக்கியுள்ளார். ‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை அசோக் செல்வன் தயாரித்துள்ளார். ரொமான்ஸ் கலந்த ஆக்ஷன் ‘அன்பில் அவன்’ படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அதிரடி காட்சிகளுக்கு பிரபல சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் பணியாற்றியுள்ளார். காதல் மற்றும் ஆக்ஷன் அம்சங்கள் கலந்து உருவாகியுள்ள இப்படம், அசோக் செல்வனின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவான இப்படம் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதனை அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியான அறிக்கையில், “கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்தத் திரைப்படம் மிகுந்த அன்புடனும் அர்ப்பணிப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் அதற்குரிய பிரம்மாண்டத்துடனும், பெரிய அளவிலான வெளியீட்டுடனும் உங்களை வந்தடைய இந்த ஒரு வாரம் கூடுதலாக எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் அவசியமானதே. இந்தப் பயணத்திற்காக நாங்கள் தயாராகி வரும் நிலையில், உங்கள் தொடர்ந்த அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் உங்களைச் சந்திப்போம் என உறுதியளிக்கிறோம். இந்தக் கதையை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக எங்களுடன் இருப்பதற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளனர். See you in theatres on 2nd October! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/ashok-selvans-anbil-avan-release-date-postponed




