கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கடிதத்திலேயே தெளிவாக உள்ளது. அந்தந்த மாவட்டத்தில் கட்சிக்காக உழைத்தவர்கள், எம்.ஜி.ஆர், அம்மா காலத்தில் இருந்து உழைத்தவர்கள், பொதுச்செயலாளர் எடப்பாடியார் முதலமைச்சராக உழைத்தவர்களுக்கு எல்லாம் பதவி வழங்கப்படவில்லை. அதனால்தான் நான் உட்பட நத்தம் விஷ்வநாதன், தங்கமணி எல்லாம் பதவி வேண்டாம். நாங்கள் உருவாக்கிய கட்சியில் நாங்கள் உறுப்பினராக தொடர்கிறோம் என சொல்லி உள்ளோம். ஆனால் நீங்கள்தான் பல விதமாக மீடியாவில் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க. மகளிரணி கூட்டத்திற்கு வளர்மதி எப்போதும் கூப்பிடுவார். ஆனால் நேற்றைய கூட்டம் தொடர்பாக எங்களுக்கு தகவல் சொல்லவில்லை. அதற்கு முந்தைய நாளே கடிதம் கொடுத்துவிட்டோம். அதனால் கூட கூப்பிடாமல் இருந்திருக்கலாம். நான் சொன்ன ஜாம்பவான்களுக்கு அர்த்தம் வேறு. கட்சிக்காக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் உழைத்தவர்கள், எடப்பாடியாருக்காக களத்தில் உழைத்தவர்கள், கட்சியை வளர்த்தவர்கள் என்ற கருத்தில் சொன்னேன். கடந்த 4ம் தேதி பதவி எல்லாம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் கொடுக்கவில்லை. ஏன் என அவர்களிடமே கேளுங்கள். எங்களை பொறுத்தவரை கடிதத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறோம். இன்னும் இந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும். பொதுச்செயலாளர் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றார். விஜயபாஸ்கர்கள் த.வெ.க-வில் இணைந்தது குறித்த கேள்விக்கு எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க மறுத்துவிட்டார். ’விரைவில் தேர்தல் வரும் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தெரிகிறது!’ - பெ. சண்முகம் காட்டம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/sp-velumani-explains-why-did-not-want-positions-and-would-continue-as-party-cadres



